நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சண்டைக்காட்சி லீக்?

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் சண்டைக்காட்சி லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர்.

படக்குழுவினர் 60 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் படத்தின் முக்கிய காட்சிகளை முக்கிய காட்சிகளை படமாக்கிவிட்டு சென்னை திரும்பினர்.

அதன் பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.

இதில் விஜய் மற்றும் அர்ஜுனுக்கு இடையில் வெறித்தனமான சண்டைக்காட்சி நடந்துள்ளது. அதில் நடிகர் விஜய் பாதி எறிந்த முகத்துடன் இருப்பதாக சமீபத்திய தகவல் கசிந்துள்ளது.