இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை டாப்சி

பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி குரல் கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பி வந்த நெபோடிசம் குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது பாலிவுட்டில் மீண்டும் 'மீ டூ' சீசன் துவங்கியுள்ளது. நடிகை பாயல் கோஷ் என்பவர் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் பிரதமர் மோடியிடமே கேட்டுகொண்டுளார்.