விடா முயற்சி படத்திற்காக விடாமல் முயற்சி செய்து 10 கிலோ எடை குறைத்துள்ள அஜித்

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போக காரணம் என்னவென்று இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது படத்திற்காக 10 கிலோ வரை எடை குறைத்துள்ளார் அஜித். இதுதான் படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

அஜித் தற்போது அவரது அடுத்த படமான விடாமுயற்சி ஷூட்டிங்கை இன்னும் தொடங்காமல் இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் ஷூட்டிங்கை தொடங்க முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. படம் தொடர்ந்து தாமதம் ஆனாலும், அஜித் இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க தான் நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் 10 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறாராம். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.