விமர்சனம் எல்லாம் சூப்பர்தான்... ஆனால் வசூல் டல்

சென்னை: விமர்சனம் நன்றாக இருந்தாலும் முதல் நாளிலேயே குறைந்த வசூலை பெற்றுள்ளது நடிகர் விஷாலின் லத்தி படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஷால். ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்த விஷால் இப்போது வெற்றிப் படத்தை கொடுப்பதில் தடுமாறி வருகிறார்.

சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறுவதில்லை. இப்போது விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் இப்படம் ஒரு போலீஸ் ஸ்டோரி.

படத்தின் கதைக்கான விமர்சனம் ஓரளவிற்கு நன்றாக தான் வந்துள்ளது, ஆனாலும் வசூலில் டல் அடிக்கிறது. அதாவது இப்படம் முதல் நாள் வசூலில் ரூ. 2 கோடிக்கு குறைவான வசூலை பெற்றுள்ளதாம். இதனால் விமர்சன ரீதியாக நன்றாக இருந்தாலும் வசூல் டல் அடிப்பதால் படக்குழுவினர் கவலையில் உள்ளனராம்.