கார்த்தி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் கார்த்தி நடிப்பில் விருமன் திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி ரிலீசாகிறது.
இதனைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் குக்கு, ஜோக்கர், ஜிப்ஸி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஜு முருகன், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு ‘ஜப்பான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்த வில்லை.

கார்த்தி ரொம்பவே புதுமையான லுக்கில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜப்பான்’ படத்தில் கார்த்தியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி நடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இப்போது விஜய் சேதுபதிக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் சுனில் கமிட் ஆகியுள்ளதாகவும் பேசப்படுகிறது.