வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா - ரியோ; ப்ரோமோ செம வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்றைய ப்ரோமோவில் அனிதா- ரியோ மத்தியில் கோபமான வாக்குவாதம் நடக்கிறது.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து தங்கள் விளையாட்டை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ஓய்வறையில் இருக்கும் அனிதா சம்பத், வெளியே நிற்கும் ரியோ ராஜிடம் நிஷா அக்கா பண்ண ஒரு விஷயம்னால அர்ச்சனா அக்கா அழுதாங்க. அந்த கேமே ஒரு நிமிஷம் டவுன் ஆச்சு. அது உங்களுக்கு boring ஆக்கல கேமை என்று சொல்கிறார்.

அதற்கு ரியோ அந்த ஐடியாவை கொடுத்தது நீ என்று சொல்கிறார். பின், அனிதா அப்போ நிஷா அக்கா அதே விஷயத்தை செஞ்சா உங்களுக்கு பிடிக்கலை என்று சொல்கிறார். அதற்கு ரியோ பிடிக்கலை என்று சொல்கிறார். பின், அனிதா நான் அதே விஷயத்தை செஞ்சா சுவாரஸ்யம் இல்ல என்று சொல்கிறார்.

அதற்கு ரியோ பிடிக்கலைன்னு சொல்றதுக்கும் boring-ன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு என்று சொல்கிறார். பின், அனிதா அதெல்லாம் try பண்ண நிஷா அக்கா best performer என்று சொல்கிறார். அதற்கு ரியோ கேப்டன்சியை வச்சு நான் சொல்லவே இல்லையே என்று சொல்கிறார். பின், அனிதா எல்லாத்தையும் சேர்த்து தான் சொல்லணும். அப்பன்னா நீங்க தப்பா சொல்லியிருக்கீங்க என்று சொல்கிறார்.

உடனே, ரியோ thank you என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அப்போது அனிதா பார்த்தியா கரெக்ட் point பேசினா போயிடுவாரு. இதான் ரியோ என்று சொல்கிறார். பின், ரியோ திரும்பவும் அனிதா அருகில் வந்து i am not. i am not என்று கத்தி கோபமாக பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.