கப்பை வாங்காமல் விடப் போறதில்லை... கணவருக்கு முத்தம் கொடுத்து விட்டு பிக்பாஸ் சென்ற நிஷா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 16 போட்டியாளர்களும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை மூலம் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

தற்போது பிக்பாஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் கண்டிப்பாக பிக்பாஸ் போட்டியில் நான் வெற்றி பெறுவேன். கப்பு முக்கியம் பிகிலு... ஊருக்கு போறோம் ஜெயிச்சு கப்பு வாங்குறோம், கப்பை வாங்காமல் விடப் போறதில்லை. ஆனால் 100 நாள் என் புருஷனை எப்படி பிரிஞ்சு இருப்பது? என்று கூறி தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அறந்தாங்கி நிஷாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயரிட்டு உள்ளார். குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியாத நிலையில், அறந்தாங்கி நிஷா குழந்தையை பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.