நிஷா அடித்த ஜோக்கை கலாய்த்த அர்ச்சனா குரூப்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே சிரித்து கொண்டாலும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அந்த மொக்கை ஜோக்குகள் மிகப்பெரிய சோதனையாகத்தான் உள்ளது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கால்செண்டர் டாஸ்க்கில் நிஷா பேசிவிட்டு வந்தவுடன், டாஸ்க்கின்போது நிஷா அடித்த ஜோக்கை அர்ச்சனா குரூப் கலாய்க்கின்றது.

முதலில் சோம் அதன்பின் ரியோ, அந்த ஜோக்கு நல்லாவே இல்லை, இனிமேல் அதை சொல்லாதே என்றும், டிவியில் பார்க்கும்போது அவ்வளவு கேவலமாக இருந்தது என்றும் கலாய்க்கின்றனர்.

டிவியில் பார்க்கும்போதே அவ்வளவு கேவலமாக இருந்ததே, நீ சொல்ற ஜோக்கை நாங்கள் நேரில் கேட்டால் எந்த அளவுக்கு கொடூரமாக இருக்கும் என நிஷாவிடம் ரியோ கூறுகிறார். இந்த அன்சீன் வீடியோவை பார்வையாளர்களும் கலாய்த்து வருகின்றனர்.