அருண் விஜய்யின் சினம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: சினம் படத்தின் ரிலீஸ் தேதி... அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


எமெஸ்பிஎல் புரடக்ஸனில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பலக் லால்வாணி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அருண் விஜய்யின் அப்பா விஜய்குமார் தயாரித்துள்ளார். ஷபிர் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார்.

இப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் மட்டுமே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


கலவையான விமர்சனம் வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ‘யானை’ படத்தின் வெற்றிக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் ஓடிடி இணையத்தொடர் வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் நாள் ‘சினம்’ திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.