செம ஸ்லிம்மாக மாறி ஆச்சரியப்படுத்தும் குழந்தை நட்சத்திரம் பரத்

அந்த குண்டு பையனா இது இவ்வளவு ஸ்லிம்மாக எப்படி மாறினார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு குழந்தை நட்சத்திரம் பரத் மாறிஉள்ளார்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் பரத். படிக்கும் வயதிலேயே கலை மீது இருந்த ஆர்வத்தால் எவிஎம் குரூப் நைனா என்ற தெலுங்கு படத்தில் இவரை அறிமுகப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர், உத்தம புத்திரன் போன்ற பல வெற்றி திரைபடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

இதுவரை 50 திரைபடங்களுக்கு மேல் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். தெலுங்கில் வெளியான ரெட்டி படம் இவருக்கு பெரிய வெற்றி வாய்ப்பை கொடுத்தது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

தற்போது ஒல்லியாக மாறியுள்ள பரத் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் படிப்பை முடித்து விட்டு கதாநாயகனாக மீண்டும் திரையுலகில் வலம் வருவார் என்கிறார்.