வெப் தொடர்களுக்கும் இனி விருது வழங்கப்படும் .. மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், வெப் தொடர்களுக்கும் இனி விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிப்பு ...

ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுகொண்டு வருகின்றன. இதனால் திரைப்படத்துறைக்கு வழங்குவதைப் போல வெப் தொடர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெப் தொடர்களுக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்து உள்ளார்.

அந்த வகையில் கோவாவில் வருகிற நவ.20 முதல் 28-ம் தேதி வரை நடக்கும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

மேலும் ஓடிடி தளங்களில், இந்திய மொழியில் உருவான வெப் தொடர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும்.