பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் பற்றி , அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்.

ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மேல்சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என்று பலரும் விருப்பம் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.