போட்டோவுக்கு குவியும் கமென்ட்டுகள்..குழந்தைக்கு இப்படியா மாஸ்க் போடுவது..

ஜூலை 1-ம் தேதி ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு பயணப்பட்ட நியூசிலாந்து விமானம் ஒன்றில் குழந்தை ஒன்று பெரியவர்கள் அணியும் மாஸ்க்குடன் காட்சியளித்தது.

அந்த மாஸ்க் குழந்தையின் முகத்தை முழுவதுமாக மூடியிருந்தது. கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் மாஸ்க்கில் துளைகள் போடப்பட்டு இருந்தன.

இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ``குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது.


விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது எனக் குறிப்பிட்டு இருந்தார்.