பஞ்சாப்பில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள்

பஞ்சாப் :அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் ..பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உலக எய்ட்ஸ் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தநிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் ரேஷன் கடைகளுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

எனவே அதன்படி மாநிலத்தில் மொத்தம் 62044 எச்ஐவி பாதித்த நோயாளிகள் உள்ளதாகவும், இவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகள வாயிலாக 115 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் நடந்து வருவதாகவும் இலவச பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எச்ஐவி நோயாளிகள், ஒற்றை தாய்மார்கள் மற்றும் பிற சமூக ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் நல்வாழ்விற்காக மாநில அரசு இலவச ரேசன் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் மாநிலத்தில் எய்ட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மக்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியத்தை உணர்த்துகிறது. இலவச ரேஷன் திட்டத்தின் வாயிலாக தேவை உடையவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.