உடல் இளைத்து அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட டி.ராஜேந்தர்

சென்னை: பொங்கல் வாழ்த்து தெரிவித்து டி.ராஜேந்தர் வெளியிட்ட வீடியோவில் அவர் மிகவும் இளைத்து போய் உள்ளார். இதை பார்த்து ஆள் அடையாளம் தெரியாமல் டி ராஜேந்தர் மாறி போய்விட்டாரே என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் 80களில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நளினி, அமலா, ஜோதி, ஜீவிதா போன்ற பல நடிகைளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

பிரபல நடிகர் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர், தனது மகன் திருமணம் செய்து கொள்ளாதது நினைத்து கவலைப்படுவதாக தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என பல வதந்திகள் வருகிறது. இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமடைந்தார்.

தற்போது பொங்கல் முன்னிட்டு டி ராஜேந்தர் பாட்டு பாடி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதை பார்த்து ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.