நடிகை கீர்த்திஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் தனுஷ் படத்தின் படக்குழு

சென்னை: நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'மாறன்' திரைப்படம் மக்களிடையை கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, 'திருசிற்றம்பலம்', 'நானே வருவேன்' போன்ற படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. தனுஷ் - கீர்த்தி ஷெட்டி இப்படத்தினை 'ராக்கி', 'சாணிக்காகிதம்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இதில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், பிரியங்கா மோகனிடம் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.