இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம்!

தனுஷ் நடிப்பில் உருவாகிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படமும் கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தப் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது ஒரு இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ராட்சஸன் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை முழுமையாக ராம்குமார் முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாகவும் இது தனுஷின் பான்-இந்தியா படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாஸ் நடிகர்கள் படங்கள் பான்-இந்தியா என்று கூறப்படும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் உருவாகி வரும் நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது தனுஷ் இணைந்துள்ளார்.