தனுசின் வாத்தி படம் வசூலில் சக்கை போடு போடுகிறது

சென்னை: வசூலில் செம வேட்டை... தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியான வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி முதன் முறையாக தனுசை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், சம்யுக்த்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வாத்தி படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். தனுஷ் நடிக்கும் நேரடியான தெலுங்கு திரைப்படம் இதுவாகும். ஜிவி பிரகாஷின் அட்டகாசமான இசையில் 'ஒருதல காதலை தந்த' பாடல் படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் வந்துவிட்டது.

இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் ‘சார்‘ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் முதல் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு 8 கோடியும், தெலுங்கில் 3 கோடியும், கர்நாடகாவில் 1.5 கோடியும் வெளிநாடுகளில் 1.5 கோடி என ஆக மொத்தம் உலகளவில் ரூ.14 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.