தோனியும், அமிதாப் பச்சன் சந்திப்பு... புகைப்படங்கள் செம வைரல்

மும்பை: மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் எதற்காக சந்தித்து கொண்டனர் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரில் சந்தித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் அமிதாப் பச்சன் இளஞ்சிவப்பு நிற குர்த்தாவும், தோனி ஜீன்ஸ், டி-சர்ட்டும் அணிந்துள்ளனர்.

பல்வேறு படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் அமிதாப் பச்சன், தோனியை சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை. கடந்த 17-ம் தேதி நடிகர்கள் ராம் சரணும், ரன்வீர் கபூரும் இதே இடத்தில் தோனியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை அமிதாப் பச்சனை வைத்து தோனி இந்தியில் படம் தயாரிக்க உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் நிலையில் எதற்காக சந்தித்தனர் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.