சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் கூட்டணி முறிந்ததால் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க உள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். முதலில் குழந்தைகளுக்கு மட்டுமே பிடித்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருவதால் இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முதலில் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர்களுக்கு மட்டுமே படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்து வந்தார். ஆனால் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு தனது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலன். இப்படத்தினை இவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் வசூலை வாரி குவித்தன.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த மான் கராத்தே படத்தில் நடித்து ஒரு வெற்றியைக் கண்டார். மேலும் சிவகார்த்திகேயன் பலமுறை ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்து வந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த வாய்ப்பு நெல்சன்க்கு சென்றது. அதனால் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை சிவகார்த்திகேயனை வைத்து எடுத்து அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல போகிறாராம். எனவே இருவரும் தற்போது இணைந்து ஒரு புதிய படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.