இயக்குனர் மாரி செல்வராஜூக்கு கார் பரிசு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக மாமன்னனை உருவாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.

இந்நிலையில், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக மாமன்னனை உருவாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார்.