அந்தாதூன் படத்தின் ரீமேக் இயக்கத்தில் இருந்து இயக்குனர் மோகன்ராஜா விலகினார்?

இயக்குனர் மோகன்ராஜா விலகினார்... ஜே.ஜே. பிரட்ரிக் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

தேசிய விருது பெற்ற அந்தாதூன் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜாவுக்கு பதில் 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். 40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்காக ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த படம், சிறந்த தழுவல் படம் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை அந்தாதூன் குவித்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்க நடிகர் பிரஷாந்த் நடிப்பதாக இருந்தது.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்கள் எழுதியும் முடித்துவிட்டார். தற்போது இப்படத்திலிருந்து இயக்குநர் மோகன் ராஜா விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக 'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய ஜே.ஜே பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.