சிறுத்தை சிவாவின் தந்தை காலமானார்; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

கார்த்தி நடித்த 'சிறுத்தை' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் சிவா. அதன் பின்னர் அஜித் நடித்த வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு தனிப்பட்ட முறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா அவர்களின் தந்தையார் ஜெயக்குமார் அவர்கள் திடீரென இன்று சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கு குறித்த விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும் என்பது என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை காலமானதை அடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.