நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுங்களா?

சென்னை: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றார்.

இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர். அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். பல சர்ச்சை செய்திகளும் இவரை சுற்றி அதிகளவாகவே இருந்து வந்தது.

இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக, அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதாவது பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவிலேயே மூழ்கி உள்ள நடிகர் சிம்புவுக்கு தனியாகவே 119 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்தோடு சொகுசு கார், பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.