பிரபல தெலுங்கு காமெடி நடிகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் திரையுலகினர் எதையும் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திரை உலக பிரமுகர்களான அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ராஜமவுலி, விஷால் உள்பட பலர் பாதிக்கப்பட்டு அதன் பின் உடல்நிலை தேறி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருசில திரையுலக பிரமுகர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி பிரபல தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள வேணுகோபால் கோசுரி மறைவு தெலுங்கு திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களிலும் நடிகர் வேணுகோபால் கோசுரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.