ரசிகர்கள் செம உற்சாகம்... வெளியானது துருவ நட்சத்திரத்தின் 2வது பாடல்

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘His Name Is John’ பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இன்றைய 2k கிட்ஸை அட்ராக்ட் செய்துள்ளார்.

எந்த கதாபாரத்திரம் கொடுத்தாலும் பிசுரு தட்டாமல் நடிப்பில் கலக்கும் விக்ரமின் அடுத்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். விக்ரமை வைத்து இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் தான் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ’ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்று தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.