சர்தார் படம் குறித்த அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை : கார்த்தி நடிக்கும் சர்தார் படம் குறித்து அபட்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் சர்தார். இந்தி நடிகர் சங்கி பாண்டே மிரட்டும் வில்லனாக நடிக்கிறார்.

மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.