ஜெயிலர் படம் விக்ரம் படத்தின் தழுவலா... கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

சென்னை: என்ன விக்ரம் படம் போல் இருக்குமோ... தர்பார், அண்ணாத்த எனும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

தன்னோட அடுத்த திரைப்படத்தை நல்ல வெற்றிப்படமாக , ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி வைத்துள்ளார்.

அதாவது, விக்ரம் படத்தில் ஜெயில் காட்சிகள் வரும் அதில் இருந்து ஹீரோவின் கூட்டாளிகள் தப்பிப்பது போலவும், கமல் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும் வருவார். இதிலேயும் அதே போல ரஜினி கதாபாத்திரம் ஓய்வுபெற்ற ஜெயிலர் என கூறப்படுகிறது.

அதே போல தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தில் குழந்தை நட்சத்திரம் ரித்து நடிக்கிறாராம். யூடியூப் வீடியோக்களில் கலக்கி, நயன்தாராவுடன் O2 திரைப்படத்தில் நடித்த சின்ன பையன் இதில் ரஜினியின் பேரனாக நடிக்கிறார் கூறப்படுகிறது . இந்த தகவலையும் ஒப்பிட்டு பலரும் விக்ரம் படத்தில் தழுவலா ஜெயிலர் என கேட்டு வருகின்றனர்.