ரஜினி வீட்டின் முன்பு அவர் நடித்த கெட்டப்புகளில் வந்து குவியும் ரசிகர்கள்

ரஜினியின் வீட்டிற்கு முன்பாக அவரது ரசிகர்கள் திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கெட்டப்புகளில் குவிந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினியின் 70வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி. பேருந்து நடத்துநராக பணிபுரிந்து இன்று தமிழ் சினிமாவின் முகமாக மாறிப்போயுள்ள ரஜினிகாந்த், கடின உழைப்புக்காகவும் தன்னம்பிக்காகவும் வாழ்க்கையில் பலரின் இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார்.

அவரின் ஸ்டைல், நடிப்பு, நகைச்சுவை போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பட்டமும் கிடைத்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஜப்பானில்கூட அவரது முத்து படம் சூப்பர் ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்கது.

ரஜினி கூறுவது போலவே, அவருக்கு எழுச்சியான பிறந்தநாள்தான். அரசியலுக்கு வருகிறேன் என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ரஜினியின் திரைப்பட கெட்டப்புகளில் போயஸ் கார்டனில் அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

ரஜினி படங்களில் நடித்த பாட்ஷா,அண்ணாமலை, எந்திரன் என பல கெட்டப்புகளிலேயே அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.