நடிகர் கங்கா மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல்

சென்னை: உயிருள்ளவரை உஷா பட நடிகர் கங்கா காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளிவந்த உயிருள்ளவரை உஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கங்கா. தொடர்ந்து கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், 63 வயதாகும் நடிகர் கங்கா மாரடைப்பு காரணமாக காலமானார். தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ள கங்கா மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இவருடைய மரணத்திற்கு திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.