நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தாலும் தனது தாய்மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கூட 'லவ் ஆக்சன் டிராமா' என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேலும் ஒரு மலையாள படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு 'நிழல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என். பட்டாதிரி என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாரா தற்போது 'அண்ணத்த', 'நெற்றிக்கண்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.