சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!

கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிலையில் இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி விட்டது. அந்த வகையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கார்த்தி தனது கையில் சாட்டையை வைத்து சுழற்றியபடி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் இருந்த இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகி உள்ளது

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். சத்யன்சூர்யன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது