கவினுக்கு விரைவில் திருமணம்; பெற்றோர் சம்மதம்

கவினுக்கு விரைவில் திருமணம்... பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் ஆனவர் கவின். இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். ஒருசில படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனாலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அதற்கு காரணம் சக போட்டியாளர் லாஸ்லியாவுடன் காதல் என்ற செய்தி தான்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது எப்போதுமே ஒன்றாக பழகி வந்தனர். இயக்குநர் சேரன் பலமுறை லாஸ்லியாவிடம் பழக வேண்டாம் என கவினை எச்சரித்தார்.
கவின் - லாஸ்லியா காதல் கிசுகிசு காரணமாக பிக்பாஸ் சீசன் 3 நன்றாக சென்றது. பிக்பாஸ் முடிந்தபின் இவர்களது காதல் கதை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் ஆளுக்கொரு திசையில் பயணித்தனர்.
இதனால் அவர்கள் காதலிப்பதாக பேசப்பட்டது வெறும் வதந்தி என அவர்கள் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். லாஸ்லியாவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணப்பெண் மாடலா அல்லது ஹேர் ஸ்டைலிஸ்டா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவரும் சினிமாத்துறையை சேர்ந்தவர் தான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.