பாசிட்டிவ் விமர்சனங்களால் வசூலை வாரி குவிக்கும் கவினின் டாடா படம்

சென்னை; பாசிட்டிவ் விமர்சனங்களால் கவின் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்துக்கு ஏற்றது போல படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், “டாடா” திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 6 லிருந்து 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் நாளை விட அடுத்ததாக 2,3 ஆகிய நாட்களில் படத்தின் வசூல் அதிகமாகியுள்ளது. மேலும் படத்திற்கு இன்னும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கவின் சினிமா கேரியரில் இது மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக இருக்கும் என்கின்றனர்.