ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம் இணையதளங்களில் வைரல்!

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் தங்கள் சமூக வலைத்தளங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று 6 மணிக்கு வெளியான இந்த சர்வதேச ஆல்பம் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் மற்றும் கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா இணைந்து கம்போஸ் செய்த இந்த ஆல்பத்தின் பெயர் ’கோல்ட் நைட்ஸ்’. High and Dry என்று தொடங்கும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் ஜூலியா கர்தா ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை ஜூலியா கர்தா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.