வருங்கால கணவருடன் ரொமான்டிக்காக புகைப்படங்கள் எடுத்த ஹன்சிகா

சென்னை: நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் ரொமான்டிக்காக புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகாவுக்கும், தொழிலதிபரான ஹோஹைல் கதுரியாவுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பாரம்பரிய சடங்குகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் ரொமான்டிக்காக புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

சிவப்பு நிற உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் லைக்ஸை குவித்து வருகின்றனர்.