ஜவான் படத்தின் வெற்றியால் சம்பளத்தை உயர்த்தி விட்டாரா அட்லீ!!!

சென்னை: ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லீயின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கடந்த 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜவான். ரூ. 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இப்படம் மூலம் அட்லீயின் மார்க்கெட் எங்கேயே சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாலிவுட் பக்கம் சென்றதை தொடர்ந்து இப்போது அட்லீ டோலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது, புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனுடன் தான் இணைய இருக்கிறார் என்கின்றனர்.

ஜவான் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லீயின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த சம்பள உயர்வு விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.