.”லியோ” படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பது இவராம்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தை பார்க்க இந்திய சினிமாவே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளது என கூறலாம். கண்டிப்பாக படம் விஜய் சினிமாக்கு அருகில் அதிக வசூல் கொடுக்கப் போகும் படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி இத்திரைப்படம் பற்றி லேட்டஸ்ட் ஆன தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று கூட படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தது கிட்டத்தட்ட 3 பாடல்கள் இருப்பதாகவும், அந்த 3 பாடல்களையும் அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளதாகவும் தகவல் ஒன்று பரவியது.

அதை தொடர்ந்து தற்பொழுது லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. இதையடுத்து அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பது பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் தான்.

எனவே, இதற்காக மேத்யூ சுத்தமாக தாடி எல்லாம் எடுத்து, ஒரு இளம் பையன்போல் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அவர் மகனாக நடிக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் செம மாஸ் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோன்று படத்தில் இயல் என்ற கேரக்டரை இயக்குநர் லோகேஷ் சஸ்பென்சாக வைத்துள்ளாரம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.