ராகவா லாரன்சுக்கு கெளரவ டாக்டர் பட்டம்..

ராகவா லாரன்ஸ், டான்ஸ் மாஸ்டர், நடிகர் என்பதை தாண்டி அவர் சமுக ஆர்வலர் .இவரின் இந்த சமுக பணிகளை பாராட்டி, சர்வேதச ஊழலுக்கு எதிரான மற்றும் மனித உரிமைகள் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக விளங்கும் இந்த அமைப்பு வழங்கி உள்ள கெளரவத்தால் லாரன்சிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், லாரன்ஸ் சார்பில் அவருடைய அம்மா கண்மணி இந்த விருதினை பெற்றார்.இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்.

இதற்காக சர்வேதச ஊழலுக்கு எதிரான மற்றும் மனித உரிமைகள் கழகத்திற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். இந்த விருது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இந்த விருதினை என் சார்பாக என் அம்மா வாங்கி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.