சூரரைப்போற்று திரைப்படம் எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது?

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக போகிறது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் ரூபாய் 60 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டதாகவும், சாட்டிலைட் உரிமை 15 கோடிக்கும் ஹிந்தி டப்பிங் உரிமை 20 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டதாகவும் எனவே இந்த படத்தின் மொத்த வியாபாரம் சுமார் 90 கோடி என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தின் உண்மையான வியாபாரம் குறித்த தகவல் கோலிவுட்டில் கசிந்து வருகிறது. அமேசான் நிறுவனம் சூரரைப்போற்று படத்திற்காக ரூபாய் 45 கோடி மட்டுமே கொடுத்திருப்பதாகவும் ரூ.60 கோடி கொடுத்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் சூரரைப்போற்று திரைப்படம் உண்மையில் எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த குழப்பம் கோலிவுட்டில் நீட்டித்து வருகிறது.

உண்மையில் ஒரு படத்தின் வியாபாரம் என்பது தயாரிப்பாளர் மற்றும் ஓடிடி நிறுவனத்திற்கு இடையே முடிவு செய்யப்படும் தொகை என்பதும், இந்த தொகை இந்த இருவர் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால், உண்மையான தொகை குறித்து வெளிவரும் அனைத்து தகவல்களும் வதந்தி என்பது குறிப்பிடத்தக்கது.