100 கோடி செலவில் 2 அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய ஹிருத்திக் ரோஷன்!

நடிகர் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் தான் பெரும்பாலும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் 97.5 கோடிக்கு 2 அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கி உள்ள தகவல் வெளிவந்துள்ளது

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். இவர் மும்பையில் இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கியுள்ளாராம். இவற்றின் ஒன்றின் மதிப்பு 67.5 கோடி என்றும் இன்னொன்றின் மதிப்பு 30 கோடி என்றும் இரண்டையும் சேர்த்து 97.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள ஜுஹு-வெர்சோவா லிங் (Juhu-Versova Link) என்ற சாலையில் அமைந்துள்ள இந்த அப்பார்ட்மெண்டில் இருந்து பார்த்தால் அரபிக்கடல் மிக அழகாக காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 38,700 சதுர அடி என்றும் தெரிகிறது. ரிஜிஸ்டர் செலவுடன் சேர்த்து சுமார் 100 கோடி ரூபாய்க்கு இரண்டு அப்பார்ட்மென்ட் வீடுகளை பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாங்கியிருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.