விமர்சனங்களை ஏற்கிறேன் லோகேஷ்


தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (அக்.28) நடைபெற்றது.இதனை அடுத்து இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் லோகேஷ் பேசியதாவது: ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமெனில் அதற்கான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படியானவர் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை. மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும்.


இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் ‘லியோ’ சக்ஸஸ் மீட் பற்றிய அப்டேட் வரும். படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தயாரிப்பாளார் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது.

இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக் கொள்கிறேன்”என அவர் பேசினார்.