பேரை நேரடியாக சொல்லுவேன்; நடிகர் ஆரி ஆவேசம்

பேரை சொல்லி நெத்தில அடிச்ச மாதிரி சொல்லுவேன் என்று ஆரி கோபமாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் ஆரி பிக் பாஸ் worst performance-ல நானும் அனிதாவும் செலக்ட் பண்ணியிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் இருக்கோம். தேவையில்லாம ஒரு குரூப்பிஸம் அப்படின்னு ருக்கக் கூடாதுன்னு தான் நாம எல்லாருமே நினைக்குறோம். அந்த favourism-ங்குறது நம்ம அதை மீறி ஒரு இடத்துல பண்றோம். அதை நான் straight forward-ஆவே சொல்றேன். யார் யாரு என்னென்ன செய்றீங்க?

எங்கெங்க என்ன பேசுறீங்க? அப்படிங்குற விஷயம் வரைக்கும் நான் பேரை சொல்லியே நெத்தில அடிச்ச மாதிரி சொல்லுவேன் என்று கோபமாக பேசுகிறார். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் இப்போதே சொல்லுங்க என்று ஆரியிடம் கேட்கின்றனர். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.