பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவது சரியா?

பிறந்த குழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பது சரியானதா?பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள, தரமான டயபர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன.

ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயபர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை. பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.

தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயபர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின்போதும், தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம்.

ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயபரை மாற்ற வேண்டியது அவசியம்.பெற்றோர் தங்கள் வசதிக்காக 24 மணி நேரமும் குழந்தையை டயப்பருடன் இருக்க விடுவது மிகவும் தவறு.