தலைவர் 169 படத்தில் இளவயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

சென்னை: ரஜினி நடிக்கும் தலைவர் 169வது படத்தில இளவயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்ற தகவல் ெளியாகி உள்ளது.

ரஜினி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துவருகிறார்,நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து இறுதியாக வந்த படம் பீஸ்ட்,இந்த படமும் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறியது.அதற்கு பீஸ்ட் படத்துடைய மோசமான திரைக்கதையே காரணம் என கூறப்படுகிறது.
அதனால் இந்த படத்தில் திரைக்கதையை மட்டும் மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார். இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணைந்து நடிக்கிறார்.இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்,பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடிவு செய்ததாக்க கூறப்பட்டது. இப்படத்தின் கதைக்களம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாம் .
ரஜினி நடிக்கும் 169 வது படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்டு மாதம் தொடங்கும் படப்பிடிப்பிற்காக தற்போது இருந்தே ஹைதராபாத்தை செட் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் சிறந்த நண்பர்கள் என்பதால் நெல்சன் இயக்கம் ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் கண்டிப்பாக நடிப்பேன் என சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதே போல இந்த படத்தில் இளம் வயது ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு மட்டும் அல்லாமல் அரபிக்குத்து பாடலைத் தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.