ரஜினியின் படத்தில் நடிக்கிறாராம் தமன்னா?

சென்னை: கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் என்றென்றும் கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்துடன் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ரம்யா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இப்படத்தில் பிரபலம் ஒருவர் இணைவதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

அதன்படி பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் இந்த தகவலை அதிக எதிர்பார்ப்புடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.