உடல் எடை குறைத்து படம் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் இசைவாணி

சென்னை: பிக்பாஸ் புகழ் இசைவாணி தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் இசைவாணி. கானா பாடகியாக இருந்த அவர் பிக் பாஸ் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றார்.

இருப்பினும் பிக் பாஸ் காரணமாக சில ட்ரோல்களையும் சந்தித்தார். அவர் தனக்கு திருமணம் ஆனதையே ஷோவில் மறைத்துவிட்டார் என சர்ச்சை எழுந்ததும் நினைவிருக்கலாம்.

இசைவாணி தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.