நாளை வெளியாகிறது துணிவு படத்தில் ட்ரெய்லர் என்று அறிவிப்பு

சென்னை: துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தற்போது முழுவீச்சில் செய்ய தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அவர்களது கதாபாத்திர பெயர் உடன் இன்று வெளியிடப்பட்டு வருகிறது. நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்கிற ரோலில் தான் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணிக்கு துணிவு ட்ரைலர் வெளியிடப்பட இருக்கிறது.


இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.