சலார் – இறைவன் படம் ஒரே நாளில் ரிலீஸ் என்று தகவல்

சென்னை: இறைவன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதே தினத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவின் என்றென்றும் புன்னகை, உதயநிதியின் மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அகமத். தற்போது இவர் ஜெயம் ரவியை வைத்து இறைவன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இறைவன் படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதே தினத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.