தளபதி 68 படத்திற்கான தலைப்பு வரும் புத்தாண்டு பண்டிகை அன்று வெளியாகவுள்ளதாக தகவல்

புத்தாண்டு அன்று வெளியாக இருக்கும் ‘தளபதி 68’ டைட்டில் ...விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட தகவல்களாக வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்திற்கான தலைப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தான்.

எனவே அதன்படி, தளபதி 68 படத்திற்கான தலைப்பை வருகிற (2024) ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடபட்டிருக்கிறதாம். அதாவது புத்தான்டு பிறந்து சரியாக 12 மணிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக தலைப்பை வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். வழக்கமாக ஒரு திரைப்படம் தலைப்பு வைக்காமல் உருவாகி கொண்டு வருகிறது என்றால் கடைசி நேரத்தில் தலைப்பு வைக்கும் போது வேறு யாரவது முன்பே தலைப்பை பதிவு செய்து வைத்துவிடுவார்கள்.

இதனால் தலைப்பு விஷயத்தை வைத்து கடைசி நேரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் முன்னதாகவே இதை கணித்து ஒரு 4 தலைப்பை தேர்வு செய்து பதிவு செய்து வைத்திருக்கிறதாம். அந்த 4 தலைப்பில் எதாவது ஒன்று தான் தளபதி 68 படத்தின் தலைப்பாக வைக்கப்பட உள்ளதாம். விஜய் என்ன தலைப்பு சம்மதம் தெரிவிக்கிறாரோ அந்த தலைப்பு தான் இறுதியாக முடிவு செய்யப்படும்.

எனவே, விஜய் கூறும் அந்த தலைப்பு தான் வருகிற புத்தான்டு முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 68’ படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அங்கு படப்பிடிப்பு முடிந்தது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.